/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பட்டாக்கள் ரத்து கூடாது: ஆர்.டி.ஓ.,விடம் மனு
/
பட்டாக்கள் ரத்து கூடாது: ஆர்.டி.ஓ.,விடம் மனு
ADDED : மார் 13, 2024 06:43 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே தகுதிவாய்ந்த நபர்களுக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டுள்ளதால், ரத்து செய்யக் கூடாது என கிராம மக்கள், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தனர்.
விருத்தாசலம் அடுத்த ரூபநாராயணநல்லுாரில் இலவச மனைப்பட்டாக்கள் பெற்ற 30க்கும் மேற்பட்டோர், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர். அதில், ரூபநாராயணநல்லுார் கிராமத்தில், மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு 1 ஏக்கர் நிலமும், நரிக்குறவர்களுக்கும் பட்டாவும் வழங்கப்பட்டது. மீதமுள்ள இடத்தில் அனைத்து சமூகத்தினர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு சென்ற மனுக்கள் மீது ஊரக வளர்ச்சித்துறை மூலம் பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு கடந்த 2022 ஜூலை 29ம் தேதி அன்று, மணக்கொல்லை ஊராட்சியில் நடந்த விழாவில் அமைச்சர், கலெக்டர் முன்னிலையில் பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இதில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. எனவே, பட்டாக்களை ரத்து செய்யாமல், உரியவர்களுக்கே உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மனு வில் கூறப்பட்டுள்ளது. இந்திய குடியரசு கட்சி சார்பில், தகுதியில்லாத நபர்களுக்கு வழங்கிய பட்டாக்களை ரத்து செய்யுமாறு, நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

