ADDED : ஜூன் 11, 2025 07:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே செம்மண் கடத்திச் சென்ற 2 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று சின்னகண்டியங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை சோதனை செய்தனர். அதில், அனுமதியின்றி செம்மண் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் லாரி உரிமையாளர்கள் விழுப்புரத்தை சேர்ந்த சக்திவேல், புதுக்குப்பத்தைச் சேர்ந்த சிவஞானம், டிரைவர்கள் அருள்குமார், செந்தில்குமார் ஆகிய நால்வர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், செம்மண் கடத்திய 2 டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.