ADDED : செப் 09, 2025 09:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்; பெண்ணாடத்தில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, நந்தப்பாடி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்தின்பேரில் ஸ்கூட்டியில் நின்றவரை பிடித்து விசாரித்தனர்.
இதில், பெ.கொல்லத்தங்குறிச்சி உலகநாதன், 55; என்பதும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து உலகநாதனை கைது செய்து, 37 லாட்டரி சீட்டுகள், 500 பணம், ஸ்கூட்டியை பறிமுதல் செய்தனர்.