UPDATED : நவ 04, 2026 11:53 AM
ADDED : நவ 04, 2026 11:50 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: லாட்டரி சீட்டு விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலத்தில் லாட்டரி சீட்டு விற்பதாக வந்த தகவலின் பேரில், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான உட்கோட்ட குற்ற தடுப்புப்பிரிவு போலீசார் நேற்று கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
அப்போது, சேலம் ரோடு, சேகர் காலனியை சேர்ந்த சிவாஜி,63; என்பவர் லாட்டரி சீட்டு விற்பது தெரிந்தது.
அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், மொபைல் போன், ரூ.5,500 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக ருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சிவாஜியை கைது செய்தனர்.
