UPDATED : நவ 04, 2026 11:53 AM
ADDED : நவ 04, 2026 11:49 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில் நேற்று காலை மின்னலுடன் கன மழை பெய்ததால் பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
வங்கக் கடலில் உருவான ‘முரசு’ புயல் ஆந்திராவின் நெல்லுார்–நரசாபூர் இடையே நேற்று கரையை கடந்தது. இதன் காரணமாக கடலுாரில் நேற்று காலை 6:00 மணி முதல் இடி, மின்னலுடன் பரவலாக கன மழை பெய்தது.
இதனால் லாரன்ஸ்ரோடு சுரங்கபாதை, பாரதி சாலை, நேதாஜி சாலை, பாதிரிக்குப்பம் மெயின் ரோடு உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. காலை 7 மணிக்கு பிறகு மழை நின்றது.
காலையில் பெய்த கன மழை காரணமாக, கடலுார் தாலுகாவிற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.
