ADDED : பிப் 07, 2025 05:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: கம்மாபுரம் ஒன்றிய அலுவலகம் முன் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு இளங்கோவன், கனகராஜ், வீரமணி, வேலன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், கிளை செயலாளர்கள் தமிழ்மணி, சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி தள பொறுப்பாளர்களாக இருந்த நபர்களை நீக்கிவிட்டு, தி.மு.க., வைச் சேர்ந்த நபர்களுக்கு வேலை வழங்குவதை கண்டிப்பது. இதற்கு துணை போகும் கம்மாபுரம் பி.டி.ஓ., வை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பி.டி.ஓ., சங்கர் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இனையேற்று மா.கம்யூ., கட்சியினர் கலைந்து சென்றனர்.

