/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகிழம் கார்டன் மனைப்பிரிவு கே.என்.பேட்டையில் துவக்கம்
/
மகிழம் கார்டன் மனைப்பிரிவு கே.என்.பேட்டையில் துவக்கம்
மகிழம் கார்டன் மனைப்பிரிவு கே.என்.பேட்டையில் துவக்கம்
மகிழம் கார்டன் மனைப்பிரிவு கே.என்.பேட்டையில் துவக்கம்
ADDED : டிச 10, 2025 08:51 AM

கடலுார்: கடலுார், கே.என்.பேட்டையில் பி.வி. புரோமோட்டார்சின் மகிழம் கார்டன் புதிய வீட்டுமனைப்பிரிவு துவக்க விழா நடந்தது.
மனைப்பிரிவு உரிமையாளர்களான ரோட்டரி முன்னாள் ஆளுநர் பிறையோன், உதவி ஆளுநர் வெங்கடேசன் வரவேற்றனர்.
கடலுார்-நாகப்பட்டினம் பைபாஸ் சாலைக்கு அருகில் மனைப்பிரிவு அமைந்துள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மனைப்பிரிவுகள் உள்ளன.
அரசு அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவில் காற்றோட்டமான சூழல், 33 அடி, 24 அடியில் தரமான தார் சாலைகள், குறுக்கு சாலைகள், நகரை சுற்றிலும் மதில் சுவர், உடனடி மின்வசதி, 25 அடி ஆழத்தில் குடிநீர் வசதி, 1 கி.மீ., துாரத்தில் புதிய பஸ் ஸ்டாண்டு, மனைப்பிரிவு அருகில் பிரசித்தி பெற்ற திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் உள்ளன.
மனைப்பிரிவு வளாகம் முழுவதும் வீட்டிற்கு ஒன்று என்ற அடிப்படையில் மகிழம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
மனைப்பிரிவு விற்பனை விறு விறுப்பாக நடக்கிறது. மேலும், விவரங்களுக்கு 8148841997 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம் என, உரிமையாளர்கள் கூறினர்.
விழாவில், ரோட்டரி சங்க நிர்வாகிகள், நம்ம கடலுார் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பு நிர்வாகிகள், வீட்டுமனை முகவர்கள், வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.

