UPDATED : நவ 10, 2026 06:27 PM
ADDED : நவ 10, 2026 06:23 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: புவனகிரி அருகே மனைவியை தாக்கிய, கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த பெரியகண்ணாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 33; இவரது மனைவி சிவகாமி, 28; மணிகண்டன், தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால், சிவகாமி கோபித்துக்கொண்டு புவனகிரி அடுத்த சாத்தப்பாடி கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில், கடந்த 8ம் தேதி மாமியார் வீட்டிற்கு சென்ற மணிகண்டன், சிவகாமியை தாக்கிகொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து, சிவகாமி கொடுத்த புகாரின்பேரில், புவனகிரி போலீசார் வழக்குப்பதிந்து, மணிகண்டனை, தேடிவருகின்றனர்.
