நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார் : தகராறில் வாலிபரின் காதை கடித்தவரை போலீசார் கைது செய்தனர்
வடலுார் அடுத்த மருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன,34; இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி, 24; என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த ராமமூர்த்தி மற்றும் அவரது தரப்பினர், பாலமுருகனை தாக்கினர்.
அதில், கார்த்திக் என்பவர், பாலமுருகனின் காதை கடித்தார்.
இதில், காயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து கார்த்திக்கை,27; கைது செய்து, ராமமூர்த்தி, ஆனந்தகுமார் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.