ADDED : ஜூலை 22, 2025 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : முன்விரோதம் காரணமாக ஆட்டோ கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் விமல்ராஜ்,35; இவருக்கும் 16 வயது சிறுவனுக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி திருப்பாதிரிப்புலியூர் சங்கர நாயுடு தெருவிலுள்ள பெட்ரோல் பங்க்கில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த விமல்ராஜ், சிறுவனின் உறவினர் ராஜ்குமாரின் ஆட்டோ முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். புகாரின் பேரில், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விமல்ராஜை கைது செய்தனர்.