ADDED : டிச 30, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; பண்ருட்டி அருகே கார் கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி, 37; இவர், அதே பகுதியை சேர்ந்த செந்துார்பாண்டியன் என்பவரிடம், கொடுத்த கடனை நேற்று திருப்பி கேட்டார். அப்போது செந்துார்பாண்டியனுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த செந்தில்முருகன் மகன் சுதாகர்,32; சின்னதம்பியை அசிங்கமாக திட்டி, தாக்கி,கொலைமிரட்டல் விடுத்தார். மேலும் சின்னதம்பியின் கார் கண்ணாடியை உடைத்து சேதப் படுத்தினார்.
இதுகுறித்து சின்னத்தம்பி கொடுத்த புகாரில், சுதாகரை கைது செய்தனர்.