ADDED : அக் 28, 2025 06:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: பாலுார் அருகே அரசு அனுமதியின்றி டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்ய வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் பாலுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பாலுார், சன்னியாசிப்பேட்டை காந்திநகரை சேர்ந்த சின்னையன்,62;அரசின் அனுமதியின்றி 5 டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தார்.
நடுவீரப்பட்டு போலீசார் சின்னையனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

