ADDED : மே 22, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: பெலாந்துறையில் மதுபாட்டில்கள் பதுக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பெலாந்துறையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அதே பகுதியைச் சேர்ந்த சின்னராசு, 33; என்பதும், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.