/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'கூரியர்' வேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
/
'கூரியர்' வேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
ADDED : ஜூலை 18, 2025 05:15 AM

பெண்ணாடம்: 'கூரியர்' என எழுதப்பட்ட வேனில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த பெ.கொல்லத்தங்குறிச்சி கிராமத்தில் நேற்று மதியம் 1:00 மணிக்கு 'கூரியர்' என எழுதப்பட்ட (டிஎன்45- பிஆர்1056) பதிவெண் கொண்ட டாடா பிக்கப் வேனில் வெளி மாவட்டத்திற்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையில், போலீசார் பெ.கொல்லத்தங் குறிச்சி கிராமத்தில் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 20 மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வேன் டிரைவர் திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தெற்கு சித்தாம்பூர் பாபு, 37; என்பவரிடம் நடத்திய விசாரணையில், அரியலுார், திருச்சி மாவட்டங்களில் உள்ள கோழிப் பண்ணைக்கு அரிசி கடத்திச் செல்வதை ஒப்புக் கொண்டார். உடன், போலீசார் வழக்குப் பதிந்து பாபுவை கைது செய்து, ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்து, மாவட்ட குடிமை பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

