ADDED : டிச 18, 2024 07:20 AM
கடலுார் : கடலுார் முதுநகர் அருகே லாரி பேட்டரியை திருடிய நபரை, டிரைவர் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
விருத்தாசலம், செல்வராஜ் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன்,43; லாரி டிரைவர்.
இவர் நேற்று முன்தினம் தனது டாரஸ் லாரியில் அரிசி லோடு ஏற்றுவதற்காக சிப்காட்டிற்கு வந்தார். அரிசி லோடு ஏற்றிய பின்பு செம்மங்குப்பம், மத்திய சேமிப்பு கிடங்கு அருகே லாரியை நிறுத்திவிட்டு துாங்கினார். இரவு 11.30 மணிக்கு வாலிபர்கள் இரண்டு பேர் லாரியிலிருந்து பேட்டரியை திருட முயற்சித்தபோது, சத்தம் கேட்டு எழுந்த ஆனந்தன், அங்கிருந்தவர்கள் உதவியுடன் ஒரு வாலிபரை பிடித்தார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
பிடித்த வாலிபரை கடலுார் முதுநகர் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணயில் அவர் பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த ராஜசேகர்,34, எனத்தெரிந்தது. புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து ராஜசேகரைக் கைது செய்தனர்.