/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடை உரிமையாளரை மிரட்டிய நபர் கைது
/
கடை உரிமையாளரை மிரட்டிய நபர் கைது
ADDED : அக் 25, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: பினாயில் கடை உரிமையாளரை மிரட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் ஜெயில் தெருவை சேர்ந்தவர் தாஜிதீன் மகன் அப்துல் ரியாசுதீன், 31; பினாயில் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த அரியலுார் மாவட்டம், ஒடப் பேரியை சேர்ந்த ராமஜெயம் மகன் தியாகராஜன், 53, என்பவர், கடையில் பணிபுரியும் தமிழ்ச்செல்வன் என்பவரை எதற்காக வேலைக்கு சேர்த்தாய் எனக்கேட்டு ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, தியாகராஜனை கைது செய்தனர்.

