ADDED : அக் 25, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விபத்தில் தோழி இறந்த சோகத்தில், கல்லுாரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
மங்கலம்பேட்டை அடுத்த பிஞ்சனுார் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் கார்த்திக், 20; கோ யம்புத்துார் தனியார் கல்லுாரியில் படித்து வந்தார்.
கடந்த 23ம் தேதி கார்த்திக்குடன் படித்த தோழி, விபத்தில் சிக்கி இறந்ததார்.
இதனால் மனமுடைந்த கார்த்திக் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரது உறவினர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

