UPDATED : நவ 10, 2026 06:41 PM
ADDED : நவ 10, 2026 06:37 PM
அ நிறம் | அளவு
கிள்ளை: கிள்ளை அருகே வாலிபரை, பீர் பாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
அயன் குறிஞ்சிப்பாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் அஜீத்குமார், 29; இவர், கடந்த 9ம் தேதி கிள்ளை அடுத்த ராதாவிளாகம் கிராமத்தில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்றார்.
அவர், அங்கிருந்து கீழ்சாவடி டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில் வாங்கிச்சென்று குடித்துவிட்டு, காலி பாட்டில்கள் வாங்கும் நபரிடம் காலி பாட்டில்களை விற்கும்போது, அதே பகுதியை சேர்ந்த ராகுல் கண்ணன், 36; என்பவர் அஜீத்குமாரிடம், தகராறு செய்து, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து, அஜீத்குமார் கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, ராகுல் கண்ணணை, கைது செய்தனர்.
