ADDED : ஜூலை 16, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் செம்மண்டலம், தவுலத் நகரைச் சேர்ந்தவர் சுப்பராயன் மகன் செந்தமிழ், 46; கடந்த ஒரு ஆண்டாக மனைவி ரோசியுடன் தவுலத் நகரிலுள்ள குடியிருப்பில் இரண்டாவது மாடியில் வசித்து வந்தார்.
நேற்று காலை மாடியி லிருந்து தவறிவிழுந்தவர், நிர்வாணமாக இறந்து கிடந்தார்.
தகவலின்பேரில் கடலுார் புதுநகர் போலீசார் உடலை கைப்பற்றி, செந்தமிழ் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணமா என, விசாரித்து வருகின்றனர்.