/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ்சில் இருந்து இறங்கியவர் சாவு
/
பஸ்சில் இருந்து இறங்கியவர் சாவு
ADDED : நவ 27, 2025 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: அரசு பஸ்சில் இருந்து இறங்கியவர் மயங்கி, விழுந்து இறந்தார்
புவனகிரி தாலுக்கா, வடஹரிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம், 70; இவர் நேற்று முன்தினம் சிகிச்சை பெறுவதற்காக, புவனகிரியில் இருந்து வடலுாருக்கு அரசு பஸ்சில் சென்றார். வடலுார் நான்கு முனை சந்திப்பு அருகே முதியவர் மகாலிங்கம் பஸ்சில் இருந்து இறங்கிய போது மயக்கமாகி கீழே விழுந்தார்.
மீட்கப்பட்ட அவர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதித்ததில் இறந்தது தெரிய வந்தது.
புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

