UPDATED : அக் 24, 2026 01:22 AM
ADDED : அக் 24, 2026 01:18 AM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: பால்கனியில் இருந்து கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் அக்ரகார தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்,33; கொத்தனார்; இவரது மனைவி குணசவுந்தரி,27; இவர் பூங்குணம் கிழக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். கடந்த 18 ம்தேதி பாலகிருஷ்ணன் இரவு 11:45 மணியளவில் பால்கனி பகுதியில் நடந்து வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அதில் படுகாயமடைந்த அவரை, அவரது குடும்பத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .பின் மேல்சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற வந்த அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
