ADDED : அக் 24, 2026 06:54 AM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு, பலாப்பட்டு கிழக்கு தெருவை சேர்ந்தவர் சக்கரை,60; கூலி தொழிலாளி. இவர், நேற்று மதியம் வீட்டின் கதவை திறந்தபோது, அருகில் இருந்த மின் ஒயரில் கதவு பட்டு மின்சாரம் தாக்கியது.
அதில், துாக்கி வீசப்பட்ட சக்கரையை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.
காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
