ADDED : நவ 05, 2026 04:47 PM
அ நிறம் | அளவு
புதுச்சத்திரம்: அத்தியாநல்லூர் பொன்விளைந்த களத்தூர் அம்மன் கோவிலில், மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது.
புதுச்சத்திரம் அடுத்த அத்தியாநல்லூர் பொன்விளைந்த களத்தூர் அம்மன் கோவிலில், கடந்த செப்டம்பர் 17ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து தினமும் மாலை, சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
மண்டலபிஷேக நிறைவு விழா இன்று (நவ.,5) நடந்தது. அதையொட்டி இன்று காலை சிறப்பு ஹோமம் நடந்தது. 12:30 மணிக்கு சுவாமிக்கு புனிதநீர் ஊற்றி, மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
