/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மங்களூரில் நவீன வசதிகளுடன் விளையாட்டு மைதானம் தேவை
/
மங்களூரில் நவீன வசதிகளுடன் விளையாட்டு மைதானம் தேவை
மங்களூரில் நவீன வசதிகளுடன் விளையாட்டு மைதானம் தேவை
மங்களூரில் நவீன வசதிகளுடன் விளையாட்டு மைதானம் தேவை
ADDED : பிப் 06, 2025 06:30 AM
ராமநத்தம்; மாவட்டத்தின் கடைக்கோடியில் மங்களூர் மற்றும் நல்லூர் ஒன்றியங்கள் அமைந்துள்ளது. 130 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தடகளம் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்கின்றனர்.
மேலும், அரசு பள்ளிகளை சேர்ந்த ஜூனியர் மற்றும் சீனியர் மாணவ, மாணவிகள், பல்வேறு போட்டிகளில் வென்று, பதக்கங்களை பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு பெறுகின்றனர். ஆனால், மாவட்ட கடைகோடியான இப்பகுதியில் விளையாட்டு வீரர்கள் முறையாக பயிற்சி பெற விளையாட்டு மைதானங்கள இல்லாதது பெரும் குறையாக உள்ளது. எனவே, நவீன வசதிகளுடன் விளையாட்டு மைதானம் அமைக்க மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.