/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்த மேயர்
/
பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்த மேயர்
ADDED : செப் 25, 2024 03:50 AM

கடலுார் நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஒரு வகுப்பில் குப்பைகள், கிழிந்த பேப்பர்கள் கிடந்தன. இதை பார்த்த அவர், வகுப்பறையை சுத்தம் செய்யவில்லையா என, கோபமாக கேள்வி எழுப்பினார்.
அப்போது உடன் வந்த அதிகாரிகள் துாய்மை பணியாளர்களை அழைத்தனர். வகுப்பை சுத்தம் செய்ய துாய்மைப்பணியாளர் வர தாமதம் ஆனது.
உடன் மேயர், அருகில் கிடந்த துடைப்பத்தை கொண்டு தாமே சுத்தம் செய்தார். வகுப்பறையை குப்பை இல்லாமல் துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என மாணவர்களை அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது சுகாதார நல அலுவலர் எழில்மதனா, சுகாதாரத்துறை அலுவலர், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.