/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ம.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
ம.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 05, 2025 03:15 AM
சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பில் ம.தி.மு.க., கடலுார் தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட அவைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், இணைச் செயலாளர் அருள்மணி, துணைச் செயலாளர்கள் பார்த்திபன், பைந்தமிழன், சரிதா தவமணி ராஜன் முன்னிலை வகித்தனர்.
பொதுக்குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் வரவேற்றார். மாநில பொருளாளர் செந்திலதிபன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கந்தசாமி, மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் மோகனசுந்தர், தலைமை செயற்குழு உறுப்பினர் ரவி, மாநில விவசாய அணி ராமமூர்த்தி, எழிலன், தமிழ்வாணன், சாமி அண்ணாதுரை, கண்ணன், உத்திராபதி, குமார் பேசினர்.
திருச்சியில் வரும் 15ம் தேதி ம.தி.மு.க., சார்பில் நடக்கும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் மாநாட்டில் திரளாக பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.