
சிதம்பரம்: சிதம்பரம் ரோட்டரி சங்கம் மற்றும் புதுச்சேரி ஜெம் மருத்துவமனை சார்பில் வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
சிதம்பரம் வடக்கு வீதி நகராட்சி பள்ளியில் நடந்த முகாமில், ரோட்டரி சங்க தலைவர் அரிதனராஜ் வரவேற்றார்.
பாண்டிச்சேரி ஜெம் மருத்துவமனை டாக்டர்கள் சசிகுமார், சுகுமாரன், மருத்துவமனை பொது மேலாளர் ரிஷால், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் நடனசபாபதி, அழகப்பன், ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் கேதார்நாதன் முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில் பித்தப்பை, குடலிறக்கம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு 250 க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சங்க உறுப்பினர்கள் ரத்னசபேசன், பாபு, கனகவேல், ஜெயராஜ், செல்வநாராயணன், சக்திவேல், சாகுல் ஹமீது, நேசராஜ், பாலசுப்பிரமணியன், ஜெம் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
இளையராஜா நன்றி கூறினார்.

