UPDATED : அக் 22, 2026 07:56 PM
ADDED : அக் 22, 2026 07:54 PM

கடலுார்: கடலுார் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இளநிலை நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மருத்துவத் துறையில் நிர்வாக ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வெங்கடாஜலபதி துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் விளக்க உரையாற்றினார்.
அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்டத் தலைவர் பொற்செழியன், ஹரிகிருஷ்ணன் வாழ்த்தி பேசினர்.
ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் காசிநாதன் நிறைவுரையாற்றினார்.முருகவேல் நன்றி கூறினார்.
