/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மன்ற கூட்டம்
/
மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மன்ற கூட்டம்
ADDED : அக் 24, 2024 06:35 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் ஜெயமூர்த்தி தலைமையில் நடந்தது.
செயல் அலுவலர் சண்முகசுந்தரி, துணைத் தலைவர் சாதிகா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி பகுதி மழைநீர் பெண்ணையாற்றில் விடுவதற்காக வாய்க்கால் கட்டப்படுகிறது. மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது, இந்த பணிகளால் சேதமான சாலைகளை 2 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.
இதுவரை குடிநீர் இணைப்பு கிடைக்காதவர்கள் பெற்றுக்கொள்ளலாம், பருவமழை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என, தெரிவிக்கப்பட்டது.