/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கம்மாபுரம் வடக்கு ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
/
கம்மாபுரம் வடக்கு ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
கம்மாபுரம் வடக்கு ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
கம்மாபுரம் வடக்கு ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
ADDED : ஜூலை 01, 2025 02:05 AM

மந்தாரக்குப்பம் : புவனகிரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கம்மாபுரம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகளுக்கான ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டம் பெரியாக்குறிச்சியில் நடந்தது.
கிழக்கு மாவட்ட பொருளாளர் கதிரவன் தலைமை தாங்கி பேசுகையில், 'தி.மு.க., வினர் வீடு வீடாக சென்று தமிழக அரசின் நான்காண்டு சாதனைகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் எடுத்துரைத்து புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைய முதற்கட்ட மற்றும் முக்கிய பணியான ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்' என்றார்.
கிழக்கு மாவட்ட துணை செயலாளர் ஞானமுத்து, தொகுதி பார்வையாளர்கள் விக்ரமன், சிவா முன்னிலை வகித்தனர். கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் திருமாவளவன் வரவேற்றார்.
கூட்டத்தில் கம்மாபுரம் மத்திய ஒன்றிய செயலாளர் சுந்தரபாண்டியன், கங்கைகொண்டான் பேரூராட்சி செயலாளர் பக்தவச்சலம், ஒன்றிய துணை செயலாளர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.