/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனநல அவசர சிகிச்சை மீள் மையம் திறப்பு
/
மனநல அவசர சிகிச்சை மீள் மையம் திறப்பு
ADDED : டிச 12, 2025 06:44 AM

கடலுார்: கடலுாரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம் திறப்பு விழா நடந்தது.
மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் (பொ) பாலகுமாரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் நடராஜன், டாக்டர் கவிதா, மாவட்ட மனநல மருத்துவர் கலையரசி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம், ஓயாசிஸ் மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனத்தின் தலைவர் எப்சிபா தவராஜ், நிர்வாக இயக்குனர் லெனின் பிரபாகர், துணைத்தலைவர் ப்ளோரா தவராஜ், பேன்யன் நிறுவன இயக்குனர் அர்ச்சனா மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சேவைகள் அவசர கால பராமரிப்பு, உடனடி பாதுகாப்பு, மீள் மீட்பு உதவி போன்ற அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்கும் சிறப்பு மையமாக இது செயல்படும். தேசிய நலவாழ்வு இயக்கக மேலாண்மை இயக்குனர் அருண்தம்புராஜ், புதிய மையத்தை திறந்து வைத்து, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களை மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்து உரிய சிகிச்சை அளித்து பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து மாவட்ட அரசு மருத்துவமனைக்கு எதிரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

