ADDED : டிச 12, 2025 06:43 AM

திட்டக்குடி: திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், '2047ம் ஆண்டில் வளர்ந்த இந்தியா' என்ற தலைப்பில் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி முதல்வர் மணிகண்டன் தலைமை தாங்கினார். விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லுாரி உதவி பேராசியர் பரமசிவம், பேராசிரியர்கள் பொன்னுசாமி, பிரகாஷ், ஜெகதீஷ் அமல்ராஜ், சிவக்குமார் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் சிவக்குமார் வரவேற்றார்.
இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம், அறிவியல் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடந்தது.
மேலும் விடுதலைக்கு பின் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் அறிவியல் தொழில்நுட்பம், உள்நாட்டு கட்டமைப்பு சேவைகள், மருத்துவம், போக்குவரத்து, விவசாயம், தற்சார்பு இந்திய பொருள்கள் உற்பத்தி, உயர்கல்வி வளர்ச்சி, விளையாட்டு மேம்பாடு, உணவு உற்பத்தி, ஆகியன குறித்து பேசப்பட்டது.
இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் ராசுக்கண்ணு நன்றி கூறினார்.

