/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுசரிப்பு
/
எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுசரிப்பு
ADDED : டிச 25, 2024 08:34 AM

கடலுார் : கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., 37 வது ஆண்டு நினைவு தினம் அனு்சரிக்கப்பட்டது.
குறிஞ்சிப்பாடி கடைவீதியில் உள்ள காந்தி சிலையிலிருந்து, மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமையில் அமைதி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ் நிலையத்தை அடைந்தது.
அங்குள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு சொரத்துார் ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்கள் வடக்குத்து கோவிந்தராஜ், பாஷியம், கமலக்கண்ணன், வினோத் முன்னிலை வகித்தனர். பேரவை துணை செயலாளர் சிவசுப்பிரமணியன், அண்ணா தொழிற்சங்க மாநில இணை செயலாளர் சூரியமூர்த்தி, பேரவை மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜசேகர், எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் அன்பு, மாநில பொதுக்குழு உறுப்பினர் சத்யா அன்பு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் உமாதேவன், மாவட்ட அவைத் தலைவர் முத்துலிங்கம், நகர செயலாளர் பாஸ்கரன் கலந்து கொண்டனர்.