/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்திற்கு முதல்வர் வருகை திரளாக பங்கேற்க அமைச்சர் அழைப்பு
/
சிதம்பரத்திற்கு முதல்வர் வருகை திரளாக பங்கேற்க அமைச்சர் அழைப்பு
சிதம்பரத்திற்கு முதல்வர் வருகை திரளாக பங்கேற்க அமைச்சர் அழைப்பு
சிதம்பரத்திற்கு முதல்வர் வருகை திரளாக பங்கேற்க அமைச்சர் அழைப்பு
ADDED : ஜூலை 14, 2025 05:35 AM
கடலுார்: சிதம்பரத்திற்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க திரண்டு வர வேண்டுமென, கிழக்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
சிதம்பரத்திற்கு இன்று 14ம் தேதி முதல்வர் ஸ்டாலின் சென்னை தாம்பரத்தில் இருந்து ரயில் மூலம் வருகிறார். முதல்வருக்கு இரவு 7:00 மணிக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
நாளை 15ம் தேதி காலை 9.00 மணிக்கு சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். வாண்டையார் திருமண மண்டபத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை துவக்கி வைத்து, அண்ணாகுளம் அருகில் அம்பேத்கர் சிலையை திறந்து வைக்கிறார்.
லால்புரத்தில் முன்னாள் எம்.பி., இளையபெருமாள் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்து பேசுகிறார். இந்த இரு நாட்கள் நிகழ்ச்சிகளிலும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர், திரளாக பங்கேற்க வேண்டும்.