/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இறந்த சிறுவர்கள் குடும்பத்திற்கு அமைச்சர் நிவாரண நிதி வழங்கல்
/
இறந்த சிறுவர்கள் குடும்பத்திற்கு அமைச்சர் நிவாரண நிதி வழங்கல்
இறந்த சிறுவர்கள் குடும்பத்திற்கு அமைச்சர் நிவாரண நிதி வழங்கல்
இறந்த சிறுவர்கள் குடும்பத்திற்கு அமைச்சர் நிவாரண நிதி வழங்கல்
ADDED : ஏப் 22, 2025 06:49 AM

சிதம்பரம்; காட்டுமன்னார்கோவில் அருகே வெள்ளியங்கால் ஓடையில் மூழ்கி இறந்த சிறுவர்கள் குடும்பத்தினருக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் நிவாரண உதவி வழங்கினார்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த வ.கொளக்குடியை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர், வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படும், வெள்ளியங்கால் ஓடையில், கடந்த 14ம் தேதி குளிக்கச் சென்றனர். அப்போது, தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
இந்நிலையில், இறந்த சிறுவர்கள் குடும்பத்திருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து, காட்டுமன்னார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, அமைச்சர் பன்னீர்செல்வம் தலா 3 லட்சத்திற்கானகாசோலை வழங்கினார்.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., தாசில்தார் பிரகாஷ், பேரூராட்சித் தலைவர் கணேசமூர்த்தி உடனிருந்தனர்.