/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி தி.மு.க.,வினருக்கு அமைச்சர் வேண்டுகோள்

ADDED : செப் 28, 2024 07:01 AM

சிறுபாக்கம் : வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் ஈடுபட தி.மு.க., நிர்வாகிகளுக்கு, மேற்கு மாவட்ட செயலர் அமைச்சர் கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை;
வரும் 2025ம் ஆண்டு ஜன., 1ல் தகுதி நாளாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த மாதம் 20ம் தேதி முதல் அக்., 31ம் தேதி வரை வீடு தோறும் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு,மறுசீரமைப்பு, தரமான புகைப்படம் இணைப்பு, வாக்குச்சாவடி எல்லை மறுசீரமைப்பு, வாக்குச்சாவடி பட்டியல் குறித்து ஒப்புதல் பெறுதல் பணிகள் நடக்கிறது.
வாக்காளர் வரைவு பட்டியல் அக்., 29ம் தேதி வெளியிட்டு, நவ., , 28ம் தேதி வரை பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட விண்ணப்பங்கள் வழங்க உள்ளது. வரும், 2025ம் ஆண்டு ஜன., 6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுகின்றனர். இதனை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், வாக்குச்சாவடி இடமாற்றம், ஆதார் எண் இணைக்க விரும்பும் தகுதியுள்ள வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம்.
இதற்கான பணிகளில் தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், நகர, பேரூர், ஒன்றிய, வார்டு கிளை செயலர்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள் ஈடுபட வேண்டும். இவ்வாறு, அவர், கூறியுள்ளார்.