/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாதயாத்திரை பக்தர்களுக்கு எம்.எல்.ஏ., அன்னதானம்
/
பாதயாத்திரை பக்தர்களுக்கு எம்.எல்.ஏ., அன்னதானம்
ADDED : ஆக 25, 2025 02:45 AM

கடலுார் : வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., அன்னதானம் வழங்கினார்.
வேளாங்கண்ணி ஆலய கொடியேற்று விழாவிற்கு கடலுார் வழியாக ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்.
பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு கடலுார் டவுன்ஹால் அருகில் அய்யப்பன் எம்.எல்.ஏ., நேற்று அன்னதானம் மற்றும் மருந்து உபகரணங்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் டாக்டர் பிரவீன் அய்யப்பன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், தொழிலதிபர் ரவி, காங்., மாவட்ட துணை தலைவர் ஆனந்தன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜி, வேணு, அருண்ராஜ், திலகர், முருகன், பாபு, ஞானசேகர், கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.