/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழை பாதிப்புகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எம்.எல்.ஏ.,அறிவுருத்தல்

ADDED : அக் 24, 2025 11:48 PM

நெய்வேலி அக்.25-: மழை பாதிப்புகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்.எல்.ஏ.,அறிவுருத்தியுள்ளார்.
நெய்வேலி தொகுதிக்குட்பட்ட காட்டுப்பாளையம், காட்டாண்டிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நேரில் சென்று ஆய்வு செய்து, மழைநீர் தேங்குவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, நீர் வடிகால் அமைப்புகளை மேம்படுத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
ஆய்வின்போது, பி.டி.ஓ., மீரா கோமதி, பொறியாளர் சங்கர், ஒன்றிய அவைத் தலைவர் ராஜா, மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், ஒன்றிய துணைச் செயலாளர் செல்வகுமார், காட்டுப்பாளையம் ஊராட்சி செயலாளர் தனபதி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம், கிளைச் செயலாளர்கள் கணேசன், ஆறுமுகம், வி.ஏ.ஓ., மைக்கேல்ராஜ், ஊராட்சி செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.