/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.2.63 கோடியில் திட்டப்பணி எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டினார்
/
ரூ.2.63 கோடியில் திட்டப்பணி எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டினார்
ரூ.2.63 கோடியில் திட்டப்பணி எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டினார்
ரூ.2.63 கோடியில் திட்டப்பணி எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டினார்
ADDED : செப் 03, 2025 07:14 AM

நெய்வேலி : நெய்வேலி தொகுதியில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான பள்ளி கட்டடங்கள் மற்றும் சாலை பணிகளுக்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
நெய்வேலி தொகுதிக்குட்பட்ட இந்திராநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில், நபார்டு திட்டத்தின் கீழ் 1.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள். திருவாமூர் ஊராட்சியில், 1.14 கோடி ரூபாயில் 5 வகுப்பறைகள். ஏரிபாளையம் ஊராட்சியில் எம்,எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 12.50 லட்சம் ரூபாயில் சிமென்ட் சாலை உள்ளிட்ட பணிகளை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பூமி பூஜை நடத்தி துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்., 'முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர், கல்வித் திறனை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இந்த புதிய கட்டடங்கள் மாணவர்களுக்கு மேம்பட்ட கல்வி வசதிகளை வழங்குவதோடு, பள்ளியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும்' என்றார். நிகழ்ச்சியில், எஸ்.டி.ஓ., சபிதா அருள்ராஜ், டி.ஓ., துரை பாண்டியன், பி.டி.ஓ., மீராபாபு, தலைமை ஆசிரியர்கள் ரமாமணி, சிவகாமி, ஒன்றிய செயலாளர் குணசேகரன், சந்தோஷ்குமார், அவைத் தலைவர் வீர ராமச்சந்திரன்.
ஒன்றிய பொருளாளர் ஆனந்த ஜோதி, மாவட்ட பிரதிநிதி ராம வெங்கடேசன், இளங்கோ, இளைஞர் அணி துணை அமைப்பாளர் கோபு, வடக்குத்து ஊராட்சியின் முன்னாள் துணைத் தலைவர் சடையப்பன், வர்த்தகரணி தலைவர் சேகர், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.