/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குவைத் நாட்டில் பலியானவரின் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., ஆறுதல்
/
குவைத் நாட்டில் பலியானவரின் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., ஆறுதல்
குவைத் நாட்டில் பலியானவரின் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., ஆறுதல்
குவைத் நாட்டில் பலியானவரின் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., ஆறுதல்
ADDED : ஜன 27, 2025 06:13 AM

விருத்தாசலம்; குவைத் நாட்டில் பலியான மங்கலம்பேட்டை வாலிபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திந்து, எம்.எல்.ஏ., ஆறுதல் கூறினார்.
மங்கலம்பேட்டை, கீழவீதியை சேர்ந்த அப்துல் சலாம் மகன் முஹம்மது ஜூனைது, 45; அண்டகுளத்தார் தெருவை சேர்ந்த பிச்சைகனி மகன் முஹம்மது யாசின், 30; திருவண்ணாமலையை சேர்ந்த கவுஸ் பாஷா மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் என நால்வர் குவைத் நாட்டில் ஒன்றாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், கடந்த 18ம் தேதி நால்வரும் ஒரே அறையில் துாங்கினர். அப்பகுதியில் கடும் குளிர் நிலவியதால், நெருப்பு மூட்டி நால்வரும் துாங்கினர்.
அப்போது, அறை முழுவதும் புகை மூட்டம் பரவியதால், மூச்சு திணறி மூவர் இறந்தனர்.
மங்கலம்பேட்டையைச் சேர்ந்த முகம்மது ஜூனைது, முகம்மது யாசின் உடல்களை குவைத் நாட்டில் அடக்கம் செய்ய உறவினர்கள் கூறிவிட்டனர்.
இதையறிந்த அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நேற்று மங்கலம்பேட்டையில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
அப்போது, ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், தம்பிதுரை, ஒன்றிய துணை செயலாளர் தினேஷ்குமார், மங்கலம்பேட்டை பேரூர் செயலாளர் பாலமுருகன், ம உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

