/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறப்பு
/
புதிய ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறப்பு
ADDED : ஆக 10, 2025 02:26 AM

கடலுார் : கடலுார் வில்வநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
கடலுார் வில்வநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, ரேஷன் கடையை திறந்து வைத்தார்.
கடலுார் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண் இயக்குனர் சந்தியா, கூட்டுறவு சார் பதிவாளர் (பொது வினியோக திட்டம்) சங்கீதா சேகர், கள அலுவலர் சங்கீதா, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி தலைவர் ராஜேந்திரன், செயலாளர் அசோகன், இணை செயலாளர் நாகராஜன், பொருளாளர் கண்ணன், துணை தலைவர் ராமதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.