/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளியில் மொபைல் போன் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பள்ளியில் மொபைல் போன் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : நவ 24, 2025 05:55 AM

சிறுபாக்கம்: சிறுபாக்கத்தில், மொபைல் போன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.
சிறுபாக்கம் ஏ.கே.பி., மெட்ரிக் பள்ளி சார்பில் 'மொபைல் டிஜிட்டல் டிடாக்ஸ் சேலஞ்ச்' தலைப்பில் மொபைல் போன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் பிரவீன் தலைமை தாங்கினார்.
பள்ளி முதல்வர் சத்யா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் பூம்பொழில், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதில், மாணவர்கள் மொபைல் போன் அதிகம் பயன்படுத்துவதால், கற்றலில் கவனக்குறைவு ஏற்படுவது, எதிர்கால வாழ்வியல் முறை பாதிப்பது, உறவுகளுக்குள் ஏற்படும் இடைவெளி உள்ளிட்டவை குறித்து பள்ளி தாளாளர் பிரவீன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், 3 மணிநேரம் பெற்றோர் உட்பட அனைவரும் மொபைல் போன் பயன்படுத்தாமல், கடந்த, 1990ம்
விளையாட்டு போட்டிகளான, கில்லி, பல்லாங்குழி, டயர் வண்டி ஓட்டுதல், பரமபதம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
மேலும், இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பெற்றோர் அந்த பழமையான விளையாட்டு போட்டிகள் குறித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

