/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெயில் பாதிப்பை தவிர்க்க போலீசாருக்கு நவீன குடை
/
வெயில் பாதிப்பை தவிர்க்க போலீசாருக்கு நவீன குடை
ADDED : ஆக 05, 2025 01:59 AM

கடலுார்: கடலுாரில் போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் போலீசாருக்கு, நவீன ரக 'ஹேண்ட்ஸ் ப்ரீ' குடைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடலுாரில் போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் போலீசார் மழை, வெயிலில் பாதிப்பின்றி தங்கள் பணிகளை மேற்கொள்ள எஸ்.பி.,ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நவீன ரக 'ஹேண்ட்ஸ் ப்ரீ' குடைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த குடையை தோளில் மாட்டி கொள்ளக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் சிரமமின்றி சாலையில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபடுவர்.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'முதற்கட்டமாக 5 பேருக்கு 'ஹேண்ட்ஸ் ப்ரீ' வழங்கப்பட்டுள்ளது. உபயோகத்தைப் பொறுத்து மற்றவர்களுக்கும் வழங்கப்படும்' என்றனர்.