/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'மோடியின் முகத்திரையை கிழிக்க வேண்டும்' அமைச்சர் மஸ்தான் ஆவேசம்
/
'மோடியின் முகத்திரையை கிழிக்க வேண்டும்' அமைச்சர் மஸ்தான் ஆவேசம்
'மோடியின் முகத்திரையை கிழிக்க வேண்டும்' அமைச்சர் மஸ்தான் ஆவேசம்
'மோடியின் முகத்திரையை கிழிக்க வேண்டும்' அமைச்சர் மஸ்தான் ஆவேசம்
ADDED : மார் 12, 2024 06:19 AM
திண்டிவனம், : 'மோடியின் முகத்திரையை கிழிக்க வேண்டும்' என அமைச்சர் மஸ்தான் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒமந்துாரில் நேற்று நடந்த மரக்காணம் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மஸ்தான் பேசுகையில், 'மத்திய அரசின் திட்டங்களுக்கு, தமிழக அரசு விளம்பரப்படுத்திக் கொள்கிறது என்ற பொய் பிரசாரத்தை மோடி செய்கிறார். வீடு வழங்கும் திட்டம் பிரதமர் பெயரில் இருந்தாலும், இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நான்கில் ஒரு பங்குதான் நிதி தருகிறது. மீதமுள்ள தொகை மாநில நிதி ஆகும்.
பத்தாண்டு காலமாக ஆட்சி நடத்திய மோடிக்கு அடிமையாக இருக்கும் அ.தி.மு.க., இன்றைக்கு வேடம் போடுகிறது. மோடிக்கும், அ.தி.மு.க.,விற்கும் இந்த தேர்தலில் நாம் பாடம் புகட்ட வேண்டும்.
மிரட்டல், உருட்டல், தொழில் அதிபர்களை மிரட்டுவது, தன்னுடைய கட்சிக்கு தேர்தல் நிதி கொடுக்கவில்லை என்றால் ரெய்டு விடுவது, நிதி கொடுத்தால் வழக்கிலிருந்து ரிலீஸ் செய்வது, இப்படி இறங்கியிருக்கிற மோடியின் முகத்திரையை கிழிக்க வேண்டும்' என்றார்.