ADDED : ஜூலை 28, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் நகராட்சியில் கொசு ஒழிப்புக்காக நவீன இயந்திரம் மூலம் வீடு வீடாக புகை மருந்து அடிக்கும் பணி நடக்கிறது.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, நகராட்சி பணியாளர்கள் தினமும் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணி குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
சேர்மன் ஜெயந்தி, கமிஷனர் கிருஷ்ணராஜன் உத்தரவின்படி, துாய்மை பணியாளர்கள் மாலை நேரத்தில் டெங்கு கொசு ஒழிப்பதற்கான புகை மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.