ADDED : ஜூன் 21, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை, மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மகள் தமிழ் இலக்கியா, 19; சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில் பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 18ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் பத்மாவதி அளித்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர்ஜெர்மின் லதா வழக்குப் பதிந்து, தமிழ் இலக்கியாவை, தேடி வருகிறார்.