ADDED : மே 07, 2025 01:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : தாயை காணவில்லை என, மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடலுார், உண்ணாமலை செட்டி சாவடியைச் சேர்ந்தவர் விஜயகுமாரி,63. கணவரை பிரிந்து வாழ்ந்தார். கடந்த 24ம் தேதி, மகன் முத்துராஜ் வேலைக்கு சென்றிருந்தார். மாலை விஜயகுமாரி மகனுக்கு போன் செய்து, ஊருக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து முத்துராஜ் அளித்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விஜயகுமாரியை தேடி வருகின்றனர்.