ADDED : செப் 05, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மொபைல் போனில் பேசியதை தாய் கண்டித்ததால், மனமுடைந்த மாணவி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருவேப்பிலங்குறிச்சி அடுத்த டி.வி.புத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் களஞ்சியம் மனைவி கற்பகம், 51; இவரது மகள் கலைவாணி, 15; ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர், அடிக்கடி மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார்.
இதனை கடந்த 2ம் தேதி கற்பகம் கண்டித்தார். இதனால், மனமுடைந்த கலைவாணி, வீட்டில் நேற்று முன்தினம் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.