/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிகிச்சை பெறும் வாலிபரை சந்தித்து எம்.பி., ஆறுதல்
/
சிகிச்சை பெறும் வாலிபரை சந்தித்து எம்.பி., ஆறுதல்
ADDED : மார் 15, 2025 08:57 PM
விருத்தாசலம்; சென்னையில் சிகிச்சை பெறும் வாலிபரை சந்தித்து, எம்.பி., விஷ்ணு பிரசாத் ஆறுதல் கூறினார்.
விருத்தாசலம் அடுத்த எடச்சித்துார் முத்துகிருஷ்ணன் மகன் அஜித்குமார், 26. சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், கடந்த மாதம் 10ம் தேதி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை தமிழகத்திற்கு அழைத்து வர உதவி கோரி, அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
தகவலறிந்த கடலுார் எம்.பி., விஷ்ணு பிரசாத், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து சிங்கப்பூரில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை முறைகள் கேட்டறிந்து, அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை அண்ணா நகர் சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும், அஜித்குமாரை, எம்.பி., விஷ்ணு பிரசாத் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். கடலுார் காங்., மாவட்ட தலைவர் திலகர், சுரேஷ் உடனிருந்தனர்.