ADDED : நவ 05, 2024 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் மா.கம்யூ., வட்டக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு வட்டக்குழு உறுப்பினர் வெற்றிவீரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் தேன்மொழி, பிரகாஷ் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், ஸ்ரீமுஷ்ணம் கிராவல் குவாரி முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும். விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 9ம் தேதி சோழத்தரத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வட்ட செயலாளர் தினேஷ்பாபு, வட்டக்குழு உறுப்பினர்கள் பாண்டுரங்கன், குமார், கிருஷ்ணமூர்த்தி, தங்கசாமி, சுப்ரமணியன், விஜயகாந்த், குமாரி உட்பட பலர் பங்கேற்றனர்.